ஹோம் /கோயம்புத்தூர் /

மிஸஸ் தமிழ்நாடு அழகி பட்டத்தை தட்டி தூக்கிய கோவை மங்கை..!

மிஸஸ் தமிழ்நாடு அழகி பட்டத்தை தட்டி தூக்கிய கோவை மங்கை..!

X
மிஸஸ்

மிஸஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்ற கோவை பெண்

Mrs TamilNadu : திருமணமான பெண்களுக்காக தென்னிந்திய அளவில் நடைபெற்ற அழகிப்போட்டியில் கோவையை சேர்ந்த பெண் மிஸஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கேரள மாநிலம் கொச்சியில் மிஸஸ் தென் இந்திய அழகி போட்டி 2023 நடைபெற்றது. இப்போட்டிக்கு தென்னிந்திய மாநிலங்களில் இருந்து 14 பேர் இறுதி போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் கோவையை சேர்ந்த ஷாலு ராஜ் என்பவர் மிஸஸ் தென் இந்திய அழகி போட்டியில் 2வது இடத்தையும், மிஸஸ் தமிழ்நாடு அழகி பட்டத்தையும் வென்றுள்ளார். இந்த அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற ஷாலு ராஜூவுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் முதன்மை ஆணையர் ஸ்ரீராம் பரத் முடிசூட்டினார்.

மிஸஸ் தென் இந்திய அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குதங்க கிரீடம் சூட்டப்பட்டது.

இதுகுறித்து ஷாலு ராஜ் கூறுகையில், "நான் ஒரு உளவியலாளராகவும், தொழில் முனைவோராகவும் இருந்து வருகிறேன். இந்த போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

சிறார் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ள சூழலில் இந்த வெற்றியை கொண்டு பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். எனது குடும்பத்தினர் எனக்கு பக்கபலமாக இருந்தனர். இந்த வெற்றியை என் குடும்பத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் அர்ப்பணிக்கிறேன்" என்றார்.

First published:

Tags: Coimbatore, Local News