Home /coimbatore /

கோவை வாசிகளே... இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இதுதான் கடைசி தேதி

கோவை வாசிகளே... இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இதுதான் கடைசி தேதி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோயம்புத்தூரில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பொதுமக்கள் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே பொது மக்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியை 18 வயது முதல் 59 வயது உள்ளவர் மட்டுமே செலுத்திக் கொள்ள முடியும்.

கொரோனா நோய் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த 2 தடவை டோஸ் செலுத்திக் கொண்டால், போதும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்ததால், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்  கொண்டவா்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி பூஸ்டா் டோஸ் செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ்
செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வந்தது. 18 முதல் 59 வயதுக்கு உள்பட்டவா்கள் தனியாா் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள
அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆா்வம் காட்டவில்லை.

இதையடுத்து தமிழகத்தில் 18 முதல் 59 வயதுக்கு உள்பட்டவா்களுக்கும் இலவசமாக முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் திட்டம் இந்த ஆண்டு ஜூலை 15ம் தேதி தொடங்கப்பட்டது.

ஜூலை 15 முதல் அடுத்த 75 நாள்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று
அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துபவா்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்தது. இந்நிலையில், செப்டம்பா் 30-ம் தேதி வரை மட்டுமே இலவசமாக
முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 29,12,580 பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 26,70,084 பேரும் செலுத்தி கொண்டுள்ளனா். ஆனால், முன்னெச்சரிக்கை தடுப்பூசியை 2,49,107 போ் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனா்.

இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவா்களுடன் ஒப்பிடும்போது முன்னெச்சரிக்கை தடுப்பூசியை மிகவும் சொற்பமான நபா்களே செலுத்திக் கொண்டுள்ளனா்.

செப்டம்பா் 30-ம் தேதி வரை மட்டுமே முன்னெச்சரிக்கை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ளதவா்கள் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி