Home /coimbatore /

கோவையில் குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்- கலந்துகொள்வது எப்படி?

கோவையில் குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்- கலந்துகொள்வது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவையில் குரூப்-1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவையில் குரூப்-1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் தொடங்கப்பட உள்ளதாக ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

    குரூப் -1 தோ்வுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில், துணை ஆட்சியா், துணைக் காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா்,
    கூட்டுறவு சங்கங்களின் துணைபதிவாளா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், உதவி இயக்குநா் உள்ளிட்ட பிரிவுகளில் 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22ம் தேதி நடந்தது.

    இந்நிலையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில், தோ்வுக்கு விண்ணப்பித்த மனுதார்கள் தோ்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக இலவச
    நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் குரூப்-1 தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள், குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள், மாதிரித் தோ்வுகள் உள்ளிட்ட தோ்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும்.

    மேலும், குரூப் -1 தோ்வுக்கு சம்பந்தமான பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இணையதளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். அரசு தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள
    வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி