முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவை வனக்கோட்டத்தில் 2 மாதங்களில் 12 யானைகள் உயிரிழப்பு- என்ன காரணம்? வனஆர்வலர்களின் கோரிக்கை..

கோவை வனக்கோட்டத்தில் 2 மாதங்களில் 12 யானைகள் உயிரிழப்பு- என்ன காரணம்? வனஆர்வலர்களின் கோரிக்கை..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவை வனக்கோட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 12 யானைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

கோவை வனக்கோட்டத்தில் காட்டு யானை, காட்டு மாடு, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், கடமான், புள்ளிமான், சருகுமான், வரை ஆடு, வெளி மான் மற்றும் குரங்கு இனங்கள் அரிய வகை பறவையினங்கள் வாழிடமாக உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பச்சை பசேல் என்று காணப்படும். அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ள பசுந் தீவனங்கள் வன விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும்.

வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் பவானி ஆறு நீர் ஆதாரமாகவும் உள்ளதால் மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். உணவு மற்றும் நீர்நிலைகளைத் தேடி அலையும் காட்டு யானைகள் வனப்பகுதியில் இடப்பெயர்ச்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

அவ்வாறு இடப்பெயர்ச்சி செய்யும் காலங்களில் யானைகள் அமைதிப் பள்ளத்தாக்கு(சைலண்ட் வேலி), மன்னார்காடு, கோவை வனக்கோட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நீலகிரி வனக்கோட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடகா பந்திப்பூர், கேரளா வயநாடு ஆகிய பகுதிகள் யானைகளின் வலசைப் பாதையாக உள்ளது.

இவ்வாறு வலசைப் பாதையில் இரண்டு வாழ்விடங்களை இணைக்கக்கூடிய இணைப்பு பாதைகள் துண்டிக்கப்படும்போது, காட்டு யானைகள் வலசைப்பாதையை விட்டு வனப்பகுதியை யொட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயி விளை பொருட்களை நாசம் செய்து வருகின்றன.

ஒரு சில நேரங்களில் மனித, வனவிலங்குகள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கோவை வனக்கோட்டத்தில்  12 யானைகள் உயிரிழந்துள்ளன. வனப் பகுதியில் தோட்டங்கள் அருகே தாழ்வாக அமைக்கப்பட்டு இருக்கும் மின் கம்பிகள் மற்றும் மின்கம்பத்தில் காட்டு யானை உரசியதில் மின்சாரம் தாக்கி ஒரு யானை மற்றும் அவுட்டுக்காய் வெடித்ததின் காரணமாக ஒரு யானை என மொத்தம் இரண்டு யானைகள் மனிதர்களால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற 10  யானைகள் நோய் தாக்கியும் இயற்கையாகவும் உயிரிழந்துள்ளன. மேலும் வனப்பகுதியையொட்டியுள்ள விளை நிலங்களில் ரசாயன பூச்சி மருந்து அடித்த பயிர்களை உட்கொள்வதாலும் உடலில் ஏற்படும் நச்சுத்தன்மை காரணமாகவும் ஒரு சில யானைகள் உயிரிழந்து வருகின்றன.

தற்போது கோவை வனக் கோட்டத்தில் குட்டியானை மற்றும் இளம் வயது யானைகள் அதிகமாக காணப்படுகின்றன. மேலும் கோடை காலம் தொடங்கி விட்டாலே வனப்பகுதியில் ஏற்படும் கடும் வறட்சி காரணமாக யானைகள் உயிரிழப்பது என்பது அதிகரித்து காணப்படும்.

ரசாயன மூலமாக பயிர்கள் விளைவைப்பது குறித்து விவசாயிகளிலும் கேட்டபோது, ‘விளைவிக்கும் பயிர்களில் பூச்சிகள் மற்றும் புழுக்கள் தாக்குவதினால் விவசாயம் முற்றிலும் சேதம் அடைந்து வருவதாகவும் அதனால் ரசாயனம் உபயோகித்து பயிர்களை பயிரிட்டு வருவதாகவும் கூறினார்கள்.

இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்களிடம் கேட்டபோது’

’கோவை வனக்கோட்டத்தில் இதுவரை 12 யானைகள் உயிரிழந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் யானை இறந்ததற்கான காரணத்தை வனத்துறையினர் தெரிவிப்பதில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு ஏற்றார் போல் வனப்பகுதியில் யானைகள் உயிரிழப்பதை தடுக்க தேவையான முயற்சிகளை வனத்துறையினர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பிரேத பரிசோதனை அறிக்கையை வனத்துறையினர் தெரிவிக்காதது புரியாத புதிராகவே உள்ளது. காட்டு யானைகள் சாணத்திலிருந்து 18 லட்சத்து மரங்கள் உருவாகிறது. யானையின் சாணத்தில் பல ஏக்கர் காடுகள் இயற்கையாக உருவாகி வருகிறது.

வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வனத்திற்குள் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தால் இது போன்ற அசபாவிதங்களை தடுக்கலாம் எனவும் வனப்பகுதிக்குள் போதிய தண்ணீர் தொட்டிகள் இல்லாததால் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வருவதாக கூறினர்.

கனிமவளக் கடத்தலில் 2 அமைச்சர்களுக்குத் தொடர்பு... விஜய் பிரபாகர் பரபரப்பு குற்றச்சாட்டு...

top videos

    இதனை வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதினால் இதுபோல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வனஆர்வலர்கள் வேதனையடைந்தனர். இனியும் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க மின்சாரத்துறை, வனத்துறை மற்றும் தமிழக அரசும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். வனப்பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.

    First published:

    Tags: Coimbatore