கோவை காந்திபுரம் மேம்பால தாங்கு தூண்களில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களை விவரிக்கும் வகையில் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
கோவையில் உள்ள அரசு கட்டிடங்கள், மேம்பால தூண்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள சுற்றுச்சுவர்களில் மாநகராட்சி மற்றும் போலீசாரின் அனுமதியின்றி பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இது குறித்து கோவை மாநகராட்சி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாநகராட்சி மற்றும் அரசு அனுமதியின்றி அரசு கட்டிடங்கள், மேம்பால தூண்களில் போஸ்டர்கள் ஒட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் போஸ்டர் ஒட்டும் பணியாளர்கள், தனியார் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பாகுபாடே இல்லாமல் அனைத்து கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் மேம்பால தூண்களிலும் பொது சுவர்களிலும் போஸ்டர்களை ஒட்டி அழகான கோவையை அசுத்தப்படுத்தி வருகின்றனர். இதனிடையே கோவையில் திருச்சி சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் தூண்களில் தேச தலைவர்கள் படம் ஒட்டப்பட்டதால் அங்கு போஸ்டர் ஒட்டப்படுவது முற்றிலுமாக ஒழிந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காந்திபுரம் மேம்பாலத்தின் தூண்களில் சோதனை முறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஓவியங்கள் வரையப்பட்டன.
இதனிடையே காந்திபுரம் மேம்பாலத்தின் தூண்களில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி,குண்டலகேசி ஆகிய ஐம்பெரும் காப்பியங்களின் கதையை விவரிக்கும் வகையில் ஓவியமாக தீட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததுள்ளது.
இதற்காக கோவையில் உள்ள ஓவியர்களை கண்டறிந்து அவர்கள் மூலம் இந்தப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக காந்திபுரம் மேம்பாலம் தூண்களில் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பிங்களின் கதையை சொல்லும் ஓவியங்களை ஓவியர்கள் தத்துவமாக வரைந்து வருகின்றனர். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News, Longest Bridge