முகப்பு /கோயம்புத்தூர் /

28 மாநில உடைகளை உடுத்தி கேட்வாக் சென்ற மாணவிகள்.. கோவையில் அட்டகாசமான பேஷன் ஷோ!

28 மாநில உடைகளை உடுத்தி கேட்வாக் சென்ற மாணவிகள்.. கோவையில் அட்டகாசமான பேஷன் ஷோ!

X
கோவை

கோவை பேஷன் ஷோ

Coimbatore fashion show | கோயம்புத்தூரில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் 28 மாநிலங்களில் உடுத்தப்படும் ஆடைகளை உடுத்திய மாணவிகள் கேட்வாக் சென்று அசத்தியுள்ளனர்.

இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மொழி, உணவு, உடை, பழக்கவழக்கங்கள் என பல விஷயங்களும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு வருகிறது. குறிப்பாக ஒருவர் உடுத்தும் ஆடையை வைத்தே அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை இந்தியாவை நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.

இதனிடையே கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உணவுத்திருவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக 'பேஷன்-ஷோ' நடைபெற்றது. இதில் ஆடை வடிவமைப்புத்துறையை சேர்ந்த மாணவிகள் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்தனர்.

இந்தியாவின் 28 மாநிலங்களில் பெண்கள் உடுத்தும் பாரம்பரிய ஆடைகளை 28 மாணவிகள் உடுத்தி பூனை நடைபோட்டனர். நிகழ்ச்சியைக் காண குவிந்திருந்த பொதுமக்கள், இது எந்த மாநிலம்..? இது எந்த மாநிலத்தின் உடை..?" என்று தங்களுக்குள்ளேயே பேசி, அதனை கண்டுபிடித்து பெருமிதம் கொண்டதைக் கேட்க முடிந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Fashion, Local News