முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / வால்பாறை அருகே குழந்தைகள் காப்பகத்தை இடித்து சேதப்படுத்திய காட்டுயானைகள்.. நிற்கதியாக தவிக்கும் குழந்தைகள்!

வால்பாறை அருகே குழந்தைகள் காப்பகத்தை இடித்து சேதப்படுத்திய காட்டுயானைகள்.. நிற்கதியாக தவிக்கும் குழந்தைகள்!

காட்டு யானைகள் அட்டகாசம்

காட்டு யானைகள் அட்டகாசம்

Coimbatore elephant | நள்ளிரவு 2 மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் குழந்தைகள் காப்பக கட்டிடத்தை இடித்து சேதப்படுத்தியது.

  • Last Updated :
  • Pollachi, India

வால்பாறை அருகே உள்ள குழந்தைகள் காப்பக கட்டிடத்தை காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள பன்னிமேடு 2வது டிவிஷன் பகுதியில் டாடா காபிக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் குழந்தைகள் காப்பக கட்டிடத்தை இடித்து சேதப்படுத்தி உள்ளே இருந்த அரிசி, சக்கரை, உப்பு மற்றும் பருப்பு மூட்டைகளை வெளியில் இழுத்து போட்டு ருசித்து சாப்பிட்டு சென்றது.

பின்பு யானைகளின் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர்.

மேலும் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வர கூடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இருந்தனர். இதனால் இரவு நேரத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்ததோடு வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் வன எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு காட்டு யானைகள் மற்றும் மற்ற வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் இருக்க தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி.

First published:

Tags: Coimbatore, Elephant, Local News, Pollachi