Home /coimbatore /

கோவையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

கோவையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Irugur, India
    கோவை மாவட்டம் இருகூர் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    கோவை மாவட்டம் இருகூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருகூர் துணை மின்நிலையதுக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: இருகூா், ஒண்டிப்புதூா், ஒட்டா்பாளையம், ராவத்தூா், பள்ளிபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூா், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கிட்டாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி),
    அத்தப்பகவுண்டன்புதூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி