ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் நாளை மின் தடை அறிவிப்பு.. உங்க ஊர் இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

கோவையில் நாளை மின் தடை அறிவிப்பு.. உங்க ஊர் இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

மின்தடை

மின்தடை

Coimbatore power cut | கோயம்புத்தூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore | Coimbatore

  கோயம்புத்தூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 24) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  கோவை அருகே சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நாளை மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

  இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  இதையடுத்து, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவல்கள்மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மின் தடை ஏற்படும் இடங்கள்:

  சோமனூர், கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாச்சிபாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன்பாளையம், கணியூர் (ஒருபகுதி), ராயர்பாபாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீா் பந்தல், செகுடந்தாளி, இளச்சிபாளையம், காளிபாளையம் (ஒரு பகுதி), அய்யம்பாளையம் (ஒரு பகுதி).

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Coimbatore, Kovai, Power Shutdown