Home /coimbatore /

அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா.. கல்லூரி மாணவி கடத்தல்.. - கோவை மாவட்ட முக்கிய நிகழ்வுகள்..

அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா.. கல்லூரி மாணவி கடத்தல்.. - கோவை மாவட்ட முக்கிய நிகழ்வுகள்..

கோவையில் அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா

கோவையில் அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா

Coimbatore District: கோவையில்  நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

    கோவையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

    1.5 டன் இரும்பு பொருட்கள் கொள்ளை - 5 பேர் கைது

    கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அவினாசி-அத்திக்கடவு திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், திட்டப்பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் இரும்பு பொருட்கள் திருடு போயுள்ளதாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த வெங்கட கிருஷ்ணன்(25),பிரசாந்த்(24),நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கெளதம்(24),சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த நவீன்(25),பூபதி(25) என்ற 5 பேர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

    அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்

    கோவை மாநகராட்சி மன்றத்தில் கொடுக்கப்பட்ட 70 தீர்மானங்களில் மக்களுக்கான திட்டம் எதுவும் இடம்பெறவில்லை என்று கூறி நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் இருருந்து அதிமுக கவுன்சிலர்களான பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். மேலும், மாமன்ற கூட்டம் நடைபெற்ற விக்டோரியா ஹாலுக்கு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்தி மக்கள் மீது பாரத்தை சுமத்தியுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

    16 வயது கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் கைது

    கோவையை சேர்ந்த 16 வயது மாணவி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த தாராபுரத்தை சேர்ந்த கவியரசன் (19) என்ற மாணவர் 16 வயது மாணவிக்கு திருமண ஆசை காட்டி கடத்தினார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் தேடிய போலீசார் கவியரசன் மற்றும் மாணவியை மீட்டனர். இதையடுத்து மாணவியை கடத்திச் சென்ற கவியரசன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கொடிசியாவில் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் கண்காட்சி

    கோவை கொடிசியா வளாகத்தில் இன்டெக் 2022 என்ற 19 வது சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கன்காட்சி ஜூன் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் மொத்தம் 480 ஸ்டால்கள் இடம்பெற உள்ளதாகவும், இது வரை 400 ஸ்டால்கள் முன்பதிவு செய்யபட்டுள்ளதாகவும் இதில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் இடம் பிடித்து உள்ளதாகவும் கொடிசியா தலைவர் தெரிவித்தார்.

    டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

    கோவை சேரன்மாநகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரவித்து விக்னேஷ் நகர், ஆசிரியர் காலணி, ஜீவா நகர், எஸ்.ஆர் அவென்யூ, சிவசக்தி நகர், ஸ்ரீ சக்தி விநாயகா நகர் உள்ளிட்ட சேரன் மாநகர் சுற்றுவட்டாரப்பகுதிகளின் பெரும்பாலான குடியிருப்பு வாசிகள் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இந்த கடை அமைவதால் பள்ளிக்கும் , கல்லூரிக்கும் செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என பலரும் அச்சமடையும் நிலை உள்ளதாகவும், இந்த விஷயத்தில் தலையிட்டு டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    வெள்ளியங்கிரி மலையேறியவர் பலி

    சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான, இளஞ்செழியன் (55) என்பவர் நேற்று வெள்ளியங்கிரி மலையேற்றத்தை தொடங்கினார். அவர் ஐந்தாவது மலை ஏறும் போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த சக பக்தர்கள், அவருக்கு முதலுதவி அளித்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆலாந்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் நெடுஞ்செழியனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போளுவாம்பட்டி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    செய்தியாளர் : சௌந்தர்மோகன்
    Published by:Arun
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி