ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் 143 பேருக்கு புதிதாக கொரோனா- சிகிச்சையில் 1,116 பேர்

கோவையில் 143 பேருக்கு புதிதாக கொரோனா- சிகிச்சையில் 1,116 பேர்

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் 143 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் 143 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  கொரேனா நோய் பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில் தற்போது கடந்த ஒரு மாத காலமாக சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முக கவசம், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு வலியுறுத்திவருகிறது.

  கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,037ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 178 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  மாவட்டத்தில் இதுவரை 3,32,303 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தவிர 2,618 போ் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 1,116 போ் சிகிச்சையில் உள்ளனா்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Coimbatore, Local News