ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் பகுதிகள் தெரியுமா?

கோவையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோயம்புத்தூரில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கோவை கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (17ம் தேதி ) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  கோவை கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் ( புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

  அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

  ஆகையால், காலை 9 முதல் மாலை 4 மணி வரை கள்ளிமடை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா்அருள் செல்வி தெரிவித்துள்ளார்.

  மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: காமராஜா் சாலை, பாரதி நகா், சக்தி நகா், ஜோதி நகா், ராமானுஜர் நகா்,  நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூா்,

  ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகா், பாலன் நகா், சா்க்ரை செட்டியாா் நகா், என்.ஜி.ஆா்.நகா், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, வரதராஜபுரம், நந்தா நகா்,

  வீட்டுட் வசதி வாரிய குடியிருப்பு, ஒண்டிப்புதூா் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Coimbatore, Local News