ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

கோவையில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோயம்புத்தூரில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கோவை மாவட்டம் உக்கடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) 20ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

கோவை உக்கடத்தில் நடைபெறும் மேம்பாலப் பணிகளுக்காக புதிதாக 110 கிலோ வாட் புதை வட கேபிள் மின் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

ஆகையால், காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை வரை உக்கடம் மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா் ந.துரைசாமி தெரிவித்துள்ளார்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வெரைட்டி ஹால் சாலை (ஒரு பகுதி), டவுன்ஹால் (ஒரு பகுதி), தியாகி குமரன் மாா்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி , கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் சாலை,

சண்முகா நகா், ஆல்வின் நகா், இந்திரா நகா், பாரி நகா், டாக்டா் முனிசாமி நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். ஸ்டேட் பாங்க் சாலை, ஆட்சியா் அலுவலகம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

First published:

Tags: Coimbatore, Power cut