கோவை மாநகரில் சேதமடைந்த நிலையில் உள்ள தார் சாலைகளை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம், திட்ட அறிக்கை தயார் செய்து நிதிக்காக காத்திருக்கிறது.
கோவை மாநகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் தோண்டப்பட்டன. அவ்வாறு தோண்டப்பட்ட சாலைகள் வெறும் மண் கொண்டு மூடப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் தார் சாலைகள் அமைக்கப்பட்டன. தற்போது சூயஸ் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் அதற்கான குழாய்கள் பதிக்கவும் சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன.
இதனால் கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலைகளில் கோவை மாநகர மக்கள் பயணித்து அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகரிலுள்ள 456 சாலைகளை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்காக 169 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டுள்ள நிலையில், விரைவில் நிதி ஒதுக்கப்பட உள்ளது.
இதனால் கோவை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
பல்வேறு சாலைகளும் மேம்படுத்தப்பட உள்ள நிலையில் சாலைகள் தரமாக போடப்படுகிறதா என்று மாநகராட்சி பொறியாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும், அப்போதுதான் பொதுமக்கள் நீண்ட காலம் அந்த சாலையை பயன்படுத்த முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.