ஹோம் /கோயம்புத்தூர் /

மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் சிறை தண்டனை.. கோவை மாநகராட்சி எச்சரிக்கை!

மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் சிறை தண்டனை.. கோவை மாநகராட்சி எச்சரிக்கை!

மாதிரி படம்

மாதிரி படம்

இச்செயலால் உயிர் இழப்புகள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சத்துக்கு குறையாமல் இழப்பீடு வழங்க வேண்டும்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

மனித கழிவுகளை அகற்ற தன்னிச்சையாக மனிதர்களை பயன்படுத்தினால் காவல்துறை மூலம் உரிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவல நிலையை தடுக்க 2013 ஆம் ஆண்டு மத்திய அரசுமனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு தடை விதித்து சட்டம் நிறைவேற்றியது. இந்தச்சட்டம்நாடு முழுவதும் உடனடியாக அமல் படுத்தப்பட்டது . இந்த சட்டத்தின்படி இதை மீறினால் சம்மம்தப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 லட்சத்திற்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் பல இடங்களில் இந்த நிலை நீடித்து வருகிறது.

தனிநபர்கள் மேற்கொள்ளும் இத்தகைய செயல்களால் விஷவாயு தாக்கி பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பங்களும் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறுகிறது. இதனிடையே இது போன்ற செயல்களில்ஈடுபடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடை சட்டம் 2013-ன் படி பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தமுற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகளை மேற்கொள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் போதுமான கழிவுநீர் உறிஞ்சி வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது. எனவே மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், மால்கள், இதர நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் தன்னிச்சையாக மனிதர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுத்தக் கூடாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ALSO READ | எகிறும் விலைவாசி.. கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

இத்தடை சட்டத்தை மீறி எவரேனும் ஈடுப்படும் பட்சத்தில் காவல்துறை மூலம் உரிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

மேலும், இச்செயலால் ஏதேனும் உயிர் இழப்புகள் ஏற்படும் பட்சத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சத்துக்கு குறையாமல் சம்மந்தப்பட்டவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும்என்றும் மாநகராட்சி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை இத்தொழிலில் ஈடுபட்ட சுமார் 43 தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Coimbatore, Local News