முகப்பு /கோயம்புத்தூர் /

சாலையில் வழிந்தோடும் நீரை சேமிக்கும் கோவை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்

சாலையில் வழிந்தோடும் நீரை சேமிக்கும் கோவை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்

X
மழை

மழை நீர் சேகரிப்பு அமைப்பு

ஜெர்மன் தொழில்நுட்பத்தில் சாலையில் வழிந்தோடும் நீரை சேமிக்கும் நடவடிக்கையை கோவை மாநகராட்சி செய்துள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் சாலையில் வழிந்தோடும் மழை நீரை சேமிக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்திற்கே மழைநீர் சேகரிப்பில் கோவை மாநகராட்சி முன்னோடியாக திகழ்கிறது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் அலங்கார வளைவுகள், பூங்காக்கள் அமைப்பது, மிதிவண்டி நடைபாதை அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்றன.

மேலும், சாலையோரங்களில் புதைவட கேபிள்கள் பணியும் முடிவு பெற்று தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் பிரம்மாண்ட மீடியா டவரும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ரேஸ்கோர்ஸ் பகுதியில் வழிந்தோடும் மழைநீரை சேமிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சுங்கம் சாலை சந்திப்பு வரை 990 மீட்டர் நீளத்தில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சாலைகளில் வழிந்து ஓடும் மழை நீரை சேமிக்கும் பொருட்டு 25 இடங்களில்மழை நீர் உறிஞ்சும் தொட்டி கட்டமைப்பு அமைக்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று உள்ளது.

இந்த கட்டமைப்புகளை மாநகரில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதிகளிலும், மற்ற இடங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதே கோவை மக்களின் கோரிக்கையாகஉள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News