முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்.. சிறப்பம்சங்கள் என்னென்ன? - முழு விவரம்! 

கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்.. சிறப்பம்சங்கள் என்னென்ன? - முழு விவரம்! 

கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

Coimbatore Corporation Budget 2023 : கோவை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தாக்கல் செய்தார்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் விக்டோரியா அரங்கில் தாக்கல் செய்தார். இதில் 2023-24ம் நிதியாண்டில் வருவாய் வரவினம் மற்றும் மூலதன வரவினம் மொத்தம் ரூ.3018.90 கோடி எனவும், வருவாய் செலவினம் மற்றும் மூலதன செலவினம் மொத்தம் ரூ. 3029.07 கோடி எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2023-24ம் நிதியாண்டில் நிகரப்பற்றாக்குறை ரூ.10.17 கோடி ஆகும்.

இந்த பட்ஜெட் தாக்கலின் போது மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன், துணை மேயர் ஷர்மிளா ஆகியோர் உடன் இருந்தனர். பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:

மாநகர சாலைகள் :

கோவை மாநகரில் 2,240 கி.மீ நீளம் தார்சாலை, 243.67 கி.மீ நீளம் சிமெண்ட் சாலை, 16.68 நீளம் கற்சாலைகள், 114 கி.மீ நீளம் மண் சாலைகள் உள்ளன. இதில் பழுதடைந்த 51.43 கி.மீ சாலைகள் ரூ.34.93 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. 118.66 கி.மீ நீள சாலைகள் ரூ.80.47 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும்,வரும் நிதியாண்டில் 290.11 கி.மீ சாலைகள் ரூ.135.10 கோடி மதிப்பீட்டில் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் மாநகரில் உள்ள மொத்த பழுதடைந்த 408.77 கி.மீ நீள சாலைகள் ரூ. 215.57 கோடி மதிப்பீட்டில் வரும் நிதியாண்டில் சீரமைக்கப்பட்ட உள்ளது.

இதையும் படிங்க : தங்க நகைகளில் இனிமேல் HUID குறியீடு கட்டாயம் எதற்காக? - கோவையை சேர்ந்த அதிகாரி விளக்கம்!

 கூடுதல் பள்ளிக்கட்டிடங்கள் :

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த இந்த நிதி ஆண்டில் தேவைக்கேற்ப ரூ. 25 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளும், கூடுதல் கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா :

மாநகராட்சியில் உள்ள 17 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 10 உயர்நிலைப் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதற்கு என ரூ. 50 லட்சம் மதிப்பில் மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் ஒரு கோடி மதிப்பில் சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டு சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.

மேலும் ரூ. 1 கோடி மதிப்பில் பள்ளிகளுக்கு புதிய மேஜை மட்டும் நாற்காலிகள் வாங்குதல், அதேபோல் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கணினிகள் வாங்குதல் மற்றும் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மெய் நிகர் தொழில்நுட்பம் மாநகராட்சி மேல்நிலை மட்டும் உயர்நிலைப் பள்ளிகளில் ஏற்படுத்துதல், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மக்களை தேடி நூலகம், மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களில் பள்ளி இறுதி பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் 100 விழுக்காடு மதிப்பெண் பெறும் மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்குதல், மேலும் மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற செய்யும் வகுப்பின் ஆசிரியர்களுக்கு ரூ. 5000 ஊக்க தொகையாக வழங்ககுதல் போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாப்கின் எரியூட்டும் இயந்திரங்கள் :

அனைத்து மாநகராட்சி உயர்நிலை மட்டும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையில் நாப்கின் எரியூட்டும் இயந்திரங்கள் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

குடிநீர் விநியோகம் :

சீரான குடிநீர் வழங்குவதற்காக பவானி ஆற்றை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் மூன்று திட்டம் ரூ 779.86 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

மிதவை சூரிய சக்தி மின்கலம் திட்டம் :

புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் முறைகளை கண்டறிந்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை உக்கடம், கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் சக்தி திட்டங்களின் வாயிலாக 2.41 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மூலம் ரூ. 16.93 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உக்கடம் குளத்தில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சியிலே முதல்முறையாக கோவை மாநகராட்சியில் மின்சாரம் தயாரிப்பதற்கான பணிகள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் நிதி ஆண்டில் தொடங்கப்படும்.

மேயர் விருப்ப நிதி :

மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களின் போதும் மேயர் கள ஆய்வின் போதும் தெரிவிக்கப்படும் குறைகளை சரி செய்யும் விதமாக மேயர் விருப்ப நிதி இந்த நிதி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு திட்டம்: மாமன்ற உறுப்பினர்களிடம் அவரவர் வார்டுகளில் உள்ள மக்கள் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே அதனை நிறைவேற்றும் வண்ணம் மக்களுக்கான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாமன்ற உறுப்பினருக்கும் தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க : 200 நாடுகளின் கொடியை 2 நிமிடத்திற்குள் அடையாளம் கண்டு சொல்லி அசத்தும் தென்காசி சிறுமி..!

கோவை மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார்கள் இது கடந்தாண்டு பட்ஜெட் தாக்களில் என்ன சொல்லி உள்ளார்களோ அதையே தான் இந்தாண்டும் சொல்லி உள்ளார்கள் புதிதாக எதுவும் சொல்லவில்லை மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் பட்ஜெட் எதுவும் இல்லை இந்த ஆண்டு 700 கோடி வருவாய் அதிகமாக வந்துள்ளது மக்களிடம் திணித்து சொத்து வரி அதிகப்படுத்தி இந்த வருவாய் வாங்கி உள்ளனர் துணை இவ்ளோ பெரிய நகரமான கோவைக்கு எந்த திட்டமும் உருப்படியாக இல்லை பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை அதிமுக பொருதவரை இந்த பட்ஜெட் என்பது சர்க்கரை என்று பேப்பரில் எழுதினால் இனிக்காது மக்களுக்கு உதவாத வெற்று காகித பட்ஜெட்

அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு :

கோவை மாநகராட்சியில் மூன்று அதிமுக கவுன்சிலர்கள் உள்ளனர். பிரபாகரன், ரமேஷ் மற்றும் ஷர்மிளா சந்திரசேகர். கோவை மாநகராட்சியின் பட்ஜெட் புத்தகத்தை மேயர் மேசையில் திருப்பி தந்து விட்டு அவர்கள் பட்ஜெட் சிறப்பு கூட்டத்திலிருந்து வெளியேறினார்கள். வெளியேறும்போது இது வெற்று காகித பட்ஜெட், கடந்த ஆண்டு அறிவிப்புகள் தான் இதிலும் உள்ளது என கோஷங்மிட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காங்கிரஸ் கவுன்சிலர்கள் கோஷம் :

கோவை மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலர்களான 5 வது வார்டு நவீன்குமார், 15 வது வார்டு சாந்தாமணி, 44 வது வார்டு காயத்திரி, 69 வது வார்டு சரவணக்குமார், 71வது அழகுஜெயபாலன், 74 வது சங்கர், 85 வது வார்டு சரளா ஆகியோர் கருப்பு சட்டை, கருப்பு சேலை, கருப்பு துண்டு ஆகியவற்றுடனும், ராகுல் காந்தி புகைப்படத்துடனும் வந்தனர்.

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இவ்வாறு வந்தனர். மேலும் வெல்லட்டும், வெல்லட்டும் காங்கிரஸ் கட்சி வெல்லட்டும் என கோஷமிட்டனர்.

First published:

Tags: Coimbatore, Local News