இந்தியாவின் ஐன்ஸ்டீன் என்று அழைக்கப்படுபவர் ஜி.டி நாயுடு. இவர் கடந்த 1950ம் ஆண்டு கோவையில் ஜி.டி.நாயுடு அறக்கட்டளையை ஏற்படுத்தினார். இதன் கீழ் ஜி.டி.அறிவியல் அருங்காட்சியகம், ஜி.டி.கார் மியூசியம் போன்றவை செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களும், மாணவர்களும் பல ஆண்டுகளாக இதனைப் பார்வையிட்டு பயனடைந்தது வருகின்றனர். ஜி.டி.நாயுடு அறக்கட்டளை தற்போது "எக்ஸ்பிரிமெண்டா" என்ற புதிய கலந்தாய்வு அறிவியல் மையத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மையத்தின் நோக்கம், குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி, பயிற்சியாகவும், பொழுதுபோக்காகவும், எளிமையாக கற்றுக்கொள்ள வைப்பதாகும்.
இந்த அறிவியல் மையம் தொடக்க விழா வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. இதனை தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைக்கிறார். இந்த அறிவியல் மையம் 40 ஆயிரம் சதுர அடியில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கு இணையான 120க்கும் மேற்பட்ட கலந்தாய்வு அறிவியல் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன. அறிவியல் தொழில்நுட்பத்தை மாணவர்கள் எளிதாக அணுகி கற்கும் விதமாக இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.
சிறந்த அறிவியல் கல்வி அனுபவங்களை தொட்டும், உணர்ந்தும் கற்கும் வகையில் இந்த மையம் அமைந்துள்ளது. இந்த மையத்திற்கு வரும் குழந்தைகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அறிவியல் தகவல் தொடர்பாளர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் உள்ள அறிவியல் பரிசோதனைகள் தேர்வு செய்யப்பட்டு இங்கு இடம் பெற்றுள்ளன. வேகம், ஒலி, ஒளி மாயபிம்பம், ஆடிகள், கணிதம், இயற்கை, எந்திரவியல், ஆற்றலும் சக்தியும், ஒளியும் வண்ணங்களும் என பல்வேறு அறிவியல் சார்ந்த விஷயங்கள் இங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அறிவியல் மையத்தை பார்வையிட பெரியவர்களுக்கு 250 ரூபாயும், சிறுவர்களுக்கு 150 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர குழுவாக வருவோர்க்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சலுகை விலையில் நுழைவுக்கட்டணம் இருக்கும் என்று அறிவியல் மைய நிர்வாகிகள் தெரிவித்தனர். எக்ஸ்பெரிமெண்டா அறிவியல் மையம் வரும் மார்ச் 1ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை மையத்தை பார்வையிடலாம். திங்கள் கிழமைகள், தேசிய விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் இந்த மையம் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News