முகப்பு /கோயம்புத்தூர் /

பிரமீடு வடிவில் அசத்தல் சாகசம் செய்த கோவை கல்லூரி மாணவிகள்!

பிரமீடு வடிவில் அசத்தல் சாகசம் செய்த கோவை கல்லூரி மாணவிகள்!

X
பிரமீடு

பிரமீடு வடிவில் அசத்தல் சாகசம் செய்த கோவை கல்லூரி மாணவிகள்!

Coimbatore News : கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 71வது ஆண்டு விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாணவிகளின் சாகச மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை சுங்கம் பகுதியில் நிர்மலா மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லுரியில் 71வது ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதில் கோவை மத்திய சிறையின் கூடுதல் கண்காணிப்பாளஎ சதீஸ்குமார் கலந்துகொண்டு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், கல்லூரி ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்குமாக தனித்தனியே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விளையாட்டு தினத்தில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதில் மாணவிகள் ஒயிலாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் ஆடினர். முக்கிய நிகழ்வாக, மாணவிகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவிகள் ஒருவர் ஒருவர் மீது ஏறி அமர்ந்து பிரமீடு வடிவில் நின்று அசத்தினர். இது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

First published:

Tags: Coimbatore, Local News