ஹோம் /கோயம்புத்தூர் /

வாங்க.. வாங்க.. மக்களே! பலே வியாபாரிகளான கோவை எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்கள்..!

வாங்க.. வாங்க.. மக்களே! பலே வியாபாரிகளான கோவை எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்கள்..!

X
கோவை

கோவை மாணவர்கள்

Coimbatore students | மாணவர்களின் படிப்புகாக வழங்கப்பட்ட பயிற்சியில் மாணவர்கள் வியாபாரிகளாக மாறி விற்பனை செய்தனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

மேலாண்மை படிப்பு பயிலும் மாணவர்கள் மத்தியில் வியாபாரம் மற்றும் ஒருபொருளைசந்தைப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கும் வகையில் மாணவர்கள் கடை அமைத்து வியாபாரம் செய்துள்ளனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒரு பொருளை சந்தைப்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாணவர்கள் கல்லூரியிலேயே 30க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைத்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். மார்கெட்டிங் மேளா என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இதில் உணவு வகைகள், துணி வகைகள், புகைப்படங்கள், உடற்பயிற்சிக்கான மருந்து வகைகள் உள்ளிட்ட பொருட்களை மாணவர்கள் விற்பனை செய்தனர். மேலும், சந்தைப்படுத்தும் யுக்தியாக பொருட்களை வாங்குவோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க | கோவையில் நடைபெற்ற அழகி போட்டி.. மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற 21வயது இளம்பெண்!

இந்த நிகழ்ச்சியை உடல் நல நிபுணர் ஜெயாமகேஷ் மற்றும் எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.என்.சுப்ரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியிலேயே தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஸ்டால்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Coimbatore, Local News, Students