முகப்பு /கோயம்புத்தூர் /

சர்வதேச கபடி போட்டியில் ஆட்டநாயகன் விருது... சாதித்த கோவை கல்லூரி மாணவர்..!

சர்வதேச கபடி போட்டியில் ஆட்டநாயகன் விருது... சாதித்த கோவை கல்லூரி மாணவர்..!

X
மாணவர்

மாணவர் ரியாஸ்கான்

Coimbatore District News | மாணவர் ரியாஸ்கானுக்கு கோவை ரயில் நிலையத்தில் அவரது குடும்பத்தினர், கல்லூரி நிர்வாகிகள்,  நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையைச் சேர்ந்தவர் ரியாஸ்கான். இவர் சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். கபடி விளையாட்டில் ஆர்வம் கொண்ட இந்த மாணவருக்கு இந்திய அணி சார்பில் சர்வதேச அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கடந்த மாதம் நோபாளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கபடி போட்டியில் மாணவர் கலந்து கொண்டார்.

இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் பங்கேற்ற அணியில் ரியாஸ்கான் இடம்பெற்றிருந்தார். சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த கபடி போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது. இதில் ஆட்டநாயகன் விருதையும் ரியாஸ்கான் பெற்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதனைத் தொடர்ந்து கோவை திரும்பிய மாணவர் ரியாஸ்கானுக்கு கோவை ரயில் நிலையத்தில் அவரது குடும்பத்தினர், கல்லூரி நிர்வாகிகள், நண்பர்கள் ஆகியோர் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் பல்வேறு கபடி வீரர்கள் உள்ளதாகவும், கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் கபடி மைதானங்களை உருவாக்கித் தர வேண்டும் என்றும் மாணவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கபடி வீரர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க உதவ அரசு முன்வர வேண்டும் என்றும் கூறினார்.

First published:

Tags: Coimbatore, Kabaddi, Local News