Home /coimbatore /

இன்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கும் கருவியை மலிவு விலையில் உருவாக்கி அசத்திய கல்லூரி மாணவன் - எங்கு வாங்கலாம்?

இன்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கும் கருவியை மலிவு விலையில் உருவாக்கி அசத்திய கல்லூரி மாணவன் - எங்கு வாங்கலாம்?

சிக்னல்

சிக்னல் பூஸ்டர் தயாரித்து அசத்திய கல்லூரி மாணவர்..!!

Coimbatore District: கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கும் குறைந்த விலையிலான கருவியை தயாரித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி எலெக்ட்ரானிக்ஸ் மூன்றாமாண்டு படித்து வருகிறார் பரத்குமார். மாணவப் பருவத்திலேயே பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார் இவர்.

    குறைந்த விலையில் ஆட்டோமேட்டிக் சானிடைசர் இயந்திரம், 3 in 1 சைக்கிள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்த மாணவர் பரத்குமார் தற்போது குறைந்த விலையில் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவும் 'சிக்னல் பூஸ்டர்' என்ற கருவியை தயாரித்துள்ளார்.

    இதுகுறித்து மாணவர் பரத்குமார் கூறியதாவது, “மக்களுக்கு பயன்படும் வகையில் குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் விளங்கும் பல்வேறு பொருட்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். இதுவரை தானியங்கி கிருமிநாசினி இயந்திரம், ஸ்கிராப் பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட சைக்கிள் மற்றும் உணவுப் பொருட்களில் ரசாயன அளவை கண்டுபிடிக்க உதவும் கருவி ஆகியவற்றை உருவாக்கினேன்.

    எனது கண்டுபிடிப்புக்கு மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனது கண்டுபிடிப்புகளை முறைப்படி விற்பனை செய்து வருகிறேன். எனது 4வது படைப்பாக சிக்னல் பூஸ்டர் என்ற கருவியை உருவாக்கி உள்ளேன். இந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் ஒரே நேரத்தில் மூன்று பேர் இணையதளத்தை உபயோகப்படுத்தினாலும் அதன் வேகம் சீரான முறையில் இருக்கும்.

    தற்போது மார்க்கெட்டில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த கருவியை 1,200 ரூபாய்க்கு நான் விற்பனை செய்கிறேன். எனது இந்த கண்டுபிடிப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. கல்லூரியிலும் எனக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளனர்.

    இதேபோல் அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளை உருவாக்க நான் முயற்சி செய்து வருகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவர் பரத்தின் தொடர்பு எண்:

    மாணவர் பரத்குமாரை பாராட்ட விரும்புபவர்களும், சந்தேகம் பெற விரும்புவோரும், அவரின் சிக்னல் பூஸ்டர் கருவியை விலைக்க வாங்க நினைப்பவர்களுக்கும் அவரை 90252 59248 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..

    செய்தியாளர் : சௌந்தர்மோகன்
    Published by:Arun
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி