ஹோம் /கோயம்புத்தூர் /

இமாச்சல பிரதேசத்தில் பயிற்சியை முடித்து திரும்பிய என்எஸ்எஸ் மாணவர்கள்.. கோவையில் உற்சாக வரவேற்பு

இமாச்சல பிரதேசத்தில் பயிற்சியை முடித்து திரும்பிய என்எஸ்எஸ் மாணவர்கள்.. கோவையில் உற்சாக வரவேற்பு

என்.எஸ்.எஸ்

என்.எஸ்.எஸ் மாணவர்கள்

Coimbatore News : கோவையில் உள்ள கல்லூரிகளை சேர்ந்த 10 மாணவர்கள் என்.எஸ்.எஸ் அலுவலர் பிரகதீஸ்வரன் தலைமையில் கலந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

நாட்டு நலப்பணித் திட்டத்தில் அங்கம் வகிக்கும் கோவையைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இமாச்சல பிரதேசத்தில் வெற்றிகரமாக பயிற்சி முடித்துவிட்டு கோவை திரும்பியுள்ளனர்.

மத்திய அரசின் இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம் சார்பில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள நார்கண்டார் பகுதியில் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுக்கான தேசிய அளவிலான பயிற்சி கடந்த பத்து நாட்களாக நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து வெவ்வேறு கல்லூரிகளில் பயின்று வரும் 70 மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 30 மாணவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர்.

இதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட உறுப்புக் கல்லூரிகளை சேர்ந்த 10 மாணவர்கள் என்.எஸ்.எஸ் அலுவலர் பிரகதீஸ்வரன் தலைமையில் கலந்து கொண்டனர். இந்த முகாமில் மலையேற்ற பயிற்சி, மலைப்பகுதிகளில் ஏற்படும் விபத்துகளின் போது மீட்பு பணிகளில் ஈடுபடுதல், மலைப்பகுதியில் நடைப்பயிற்சி, ஆற்றைக் கடத்தல், கூடாரம் அமைத்து மலைப்பகுதிகளில் தங்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

Also Read:  "வாங்க வணக்கமுங்க.." கோயம்புத்தூருக்கு இன்னைக்கு 218-வது பிறந்தநாள்.. என்ன புடிச்சிருக்கு - மக்கள் கருத்து

இந்த முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் தற்போது சொந்த ஊர் திரும்பியுள்ளனர். தங்களக்கு கிடைத்த பயிற்சி அனுபவத்தை கொண்டு கோவையில் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக இமாச்சல் சென்ற மாணவர்கள் பெருமையுடன்தெரிவித்தனர்

Published by:Ramprasath H
First published:

Tags: Coimbatore, Local News, Students