ஹோம் /கோயம்புத்தூர் /

சுற்றுலாத்துறையின் விருதுக்கு தகுதியானவரா? இதைத் தெரிந்துகொள்ளுங்கள்

சுற்றுலாத்துறையின் விருதுக்கு தகுதியானவரா? இதைத் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா தொடர்பான தொழில்முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உலக சுற்றுலா நாள், 1980ம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 27ம் தேதி  உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக அரசின் சுற்றுலா விருதுக்கு வரும் அக்டோபா் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

1979-ம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் சுற்றுலா நாளுக்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அக்டோபர், 1997-ல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003-ல் பெய்ஜிங்கில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை விருதுகளை வழங்குகிறது. இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில் முனைவோரையும்,

மாநிலத்தில் சுற்றுலா தொடா்புடைய செயல்பாடுகளைச் செயல்படுத்துபவர்களையும் ஊக்குவிக்கும்.

இந்த விருதுகள், சுற்றுலா ஆபரேட்டா்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

15 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதானது உலக சுற்றுலா தினமான செப்டம்பா் 27-ம் தேதி சென்னையில் வழங்கப்படும்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் சுற்றுலாத் தொழில் முனைவோரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். கோவை மாவட்டத் சோ்ந்த தகுதியான நபா்கள் ஆகஸ்ட் 26ம் தேதிக்குள்விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு https://coimbatore.nic.in/ அணுகி தெரிந்து கொள்ளவும்.

First published:

Tags: Coimbatore, Local News