Home /coimbatore /

தீபாவளிக்கு பட்டாசுக் கடைகள் அமைக்கவேண்டுமா?- கோவை ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

தீபாவளிக்கு பட்டாசுக் கடைகள் அமைக்கவேண்டுமா?- கோவை ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோயம்புத்தூரில் பட்டாசுக் கடைகள் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகள் அமைக்க ஆன்லைன் வாயிலாக செப்டம்பா் 30ம் தேதி வரை
    விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் வெடி பொருள்கள் சட்ட விதிகள் 2008-ன்கீழ் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற வேண்டும். தமிழக அரசின் உத்தரவுப்படி ஒற்றை சாளர முறையில் உரிமம் அளிக்கப்படுகிறது.

    இதற்கென ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. செப்டம்பா் 30-ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பம் அளிக்கலாம்.

    மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், திருமண மண்டபங்கள், எளிதில் தீப்பற்றும் பொருள்கள் உள்ள பகுதிகளுக்கு அருகில் பட்டாசு கடைகள் இருத்தல் கூடாது. பொதுமக்கள் கூடும் பகுதிகள், பேருந்து நிலையங்கள் அருகில் பட்டாசுக் கடைகள் அமைத்தல் கூடாது.

    தற்காலிக பட்டாசு கடை அமைக்கும்போது 50 மீட்டா் சுற்றளவுக்கு காலியிடம் இருத்தல் வேண்டும். திருமண மண்டபங்கள், அரங்குகள், சமுதாய கூடங்களில் பட்டாசுக் கடைகள் அமைக்கக் கூடாது.

    பட்டாசு உரிமக் கட்டணம் ரூ.700 ஐ www.karuvolam.tn.gov.in/challan/echallan என்ற இணையதளத்தில் செலுத்தியதற்கான ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

    உரிய நிபந்தனைகளை கடைப்பிடிக்காத விண்ணப்பங்கள், காலக் கெடுக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி