ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

கோவை கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

கோவை

கோவை

Coimbatore Co-Optex Stores | கோயம்புத்தூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை குறித்த விவரங்களை மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் கோவையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களில்சிறப்பு தள்ளுபடியுடன்,ரூ.9.10 கோடிக்கு தீபாவளி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க ; கோவையில் வரும் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கோயம்புத்தூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் கூறுகையில், “தீபாவளி பண்டிகையை ஒட்டி, பட்டு, பருத்தி சேலை, போர்வை, படுக்கை விரிப்பு, தலையணை உறை, வேட்டி, லுங்கி, துண்டு, சர்ட்டுகள், சுடிதார் ரகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.

கைத்தறி ரகங்களுக்கு, 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. கோவை மருதம் நிறுவனத்துக்கு ரூ.5.15 கோடி, ஆர்.எஸ்.புரம் கோ-ஆப்டெக்ஸ்க்கு ரூ.55 லட்சம், காந்திபுரம் விற்பனை நிலையத்துக்கு ரூ.85 லட்சம், வண்ண மலர் கோ-ஆப்டெக்ஸ்க்கு ரூ.1.05 கோடி, ஸ்ரீபாலமுருகன் கோ-ஆப்டெக்ஸ்க்கு ரூ.75 லட்சம், பொள்ளாச்சி விற்பனை நிலையத்துக்கு ரூ.75 லட்சம் என, 9.10 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, கைத்தறி ரகங்களை பொதுமக்கள் வாங்க முன்வர வேண்டும்” என்று பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News