Home /coimbatore /

செஸ் போர்டாக மாறிய பேருந்து நிறுத்தங்கள்.. செல்ஃபி பாயிண்ட்கள்.. ஒலிம்பியாட் போட்டிக்காக மிளிரும் கோவை..

செஸ் போர்டாக மாறிய பேருந்து நிறுத்தங்கள்.. செல்ஃபி பாயிண்ட்கள்.. ஒலிம்பியாட் போட்டிக்காக மிளிரும் கோவை..

ஒலிம்பியாட்

ஒலிம்பியாட் போட்டிக்காக மிளிரும் கோவை..

Coimbatore District | சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் குறித்த விளம்பரங்கள், கோவை நகரை ஜொலிக்க வைத்துள்ளது.

சர்வதேச ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி துவங்குகிறது. இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழகத்தில் நடைபெறுகிறது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

இப்போட்டியானது மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் கோவையில் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செஸ் போர்டாக மாறிய பேருந்து நிறுத்தங்கள்..


செஸ் போர்டாக மாறிய பேருந்து நிறுத்தங்கள்..


மாநகரில், டவுன்ஹால், அனைத்து மண்டல அலுவலகங்கள், வஉசி பூங்கா, வஉசி மைதானம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, பன் மால், டைடல் பார்க், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிகள் நடைபெறுவது குறித்த விளம்பர எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.

செல்ஃபி பாயிண்ட்கள்..


மேலும், செஸ் செல்பி பாயிண்டு, போட்டி குறித்த விழிப்புணர்வு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இது தவிர 10க்கு மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் செஸ் போர்டு வடிவில் ஒளியூட்டப்பட்டுள்ளன. இது காண்போரை ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஒலிம்பியாட் போட்டிக்காக மிளிரும் கோவை..


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செஸ் விளையாட்டில் வரும் குதிரை, வேட்டி அணிந்து வணக்கம் கூறி வரவேற்பதைப் போன்ற சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி