ஹோம் /கோயம்புத்தூர் /

சுவாச பிரச்சனையால் பாதிப்பு... 7 மணிநேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த கோவை சிறுவன்..

சுவாச பிரச்சனையால் பாதிப்பு... 7 மணிநேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த கோவை சிறுவன்..

உலக சாதனை படைத்த கோவை சிறுவன்

உலக சாதனை படைத்த கோவை சிறுவன்

Coimbatore Boy World Record : சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்ட கோயம்புத்தூர் சிறுவன் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளான். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாணவன் தியொடரஸ் ஹெவன்(11), பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான். சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இவன் தொடர்ந்து 7 மணி நேரம் 7 வினாடிகள் இடைவிடாமல் இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளான்.

இதுகுறித்து தியொடரஸ் ஹெவன் கூறியதாவது, “சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நான் கடந்த 2 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனது பயிற்சியாளர் இந்த சிலம்பத்தில் உன்னால் சாதிக்க முடியும் என்று கூறி எனக்கு இந்த 7 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றுவதற்கான பயிற்சியை அளித்தார்.

இதன் காரணமாக தற்போது தொடர்ந்து ஏழு மணி நேரம் 7 நிமிடங்கள் இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்துள்ளேன். இந்த சாதனையை இந்தியன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், அமெரிக்கன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஐரோப்பியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆகிய மூன்று புத்தகங்கள் அங்கீகரித்துள்ளது.

இதையும் படிங்க : சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்... கோவை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

எந்த ஒரு தடங்கலும் நிரந்தரம் இல்லை. நம்முடைய முயற்சியும் திறமையும் இருந்தால் எப்பேர்ப்பட்ட தடங்களையும் மீறி பல சாதனைகள் செய்ய முடியும்” என  அவன் கூறினான்.

செய்தியாளர் : சவுந்தர் மோகன் - கோவை

First published:

Tags: Coimbatore, Local News