முகப்பு /கோயம்புத்தூர் /

Coimbatore | பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச மாஸ்க்- ரயில் நிலையத்தில் புதிய முயற்சி

Coimbatore | பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச மாஸ்க்- ரயில் நிலையத்தில் புதிய முயற்சி

X
மாஸ்க்

மாஸ்க் தரும் இயந்திரம்

Coimbatore | கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட மாஸ்க் தரும் இயந்திரம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு முகக்கவசம் வழங்கு'டிராப் அண்ட் டிரா' என்ற புதிய இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை ரயில் நிலையத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் தாங்கள் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை ஆங்காங்கே வீசிச் செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு வருகிறது.

மாஸ்க் தரும் இயந்திரம்

பயணிகள் உபயோகப்படுத்தும் பாட்டில்களை திரும்பப்பெற பல்வேறு முயற்சிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால், பெரும்பாலான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை.

மாஸ்க் தரும் இயந்திரம்

இந்த நிலையில் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்பப் பெறும் முயற்சியை கோவை ரயில் நிலைய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 'டிராப் அண்ட் டிரா' என்ற புதிய இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் தரும் இயந்திரம்

பயணிகள் தாங்கள் உபயோகப்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை இந்த இயந்திரத்தின் உட்பகுதியில் செலுத்தி இலவசமாக ஒரு முககவசம் அல்லது இலவசமாக எடையை சரிபார்க்கலாம்.

இந்த இயந்திரத்தின் உட்பகுதியில் செலுத்தப்பட்ட உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மறுசுழற்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த 'டிராப் அண்ட் டிரா' ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்த இயந்திரத்தைத் தயாரித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News