ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் உள்ள இரண்டாம் சபரிமலை குறித்து தெரியுமா?

கோவையில் உள்ள இரண்டாம் சபரிமலை குறித்து தெரியுமா?

கோயம்புத்தூரில்

கோயம்புத்தூரில் உள்ள ஐயப்பன் கோவில்

Coimbatore Aiyappan Temple | இரண்டாவது சபரிமலை என்று அழைக்கப்படும் கோவையில் உள்ள ஐயப்பன் கோவில் குறித்து இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

இரண்டாவது சபரிமலை என்று அழைக்கப்படும் கோவையில் உள்ள ஐயப்பன் கோவில் குறித்து இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

கேரளாவில் உள்ள சபரிமலை குறித்து நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். மண்டல காலத்தில் இந்த கோவிலின் பிரதான கடவுளான ஐயப்பனுக்கு விரதம் இருந்து, கோவிலுக்கு செல்வது பக்தர்களின் வழக்கம். இதே நேரத்தில் தமிழகத்தில் அமைந்துள்ளது இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படும் ஐயப்பன் கோவில்.

கோவை சித்தாபுதூரில் உள்ளது ஐயப்பன் கோவில். இங்கு பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. சபரிமலைக்கு செல்ல விரதம் இருக்கும் பக்தர்கள் பலரும் கோவையில் உள்ள இந்த கோவிலுக்கும் வந்து செல்வது வழக்கம்.

இதையும் படிங்க : கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

மண்டல காலம் என்று அழைக்கப்படும் விரத நாட்களில் இங்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு தங்குமிடமும், உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

தமிழகம் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். மலையாள மொழியில் ஐயப்பனுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

6 மணிக்கு உஷ பூஜை, 7 மணிக்கு சீவேலி பூஜை, 8 மணிக்கு அலங்கார பூஜை, 8.30 மணிக்கு பந்திரடி பூஜை 10.30 மணிக்கு உச்ச பூஜை, 11 மணிக்கு உச்ச சீவேலி பூஜை நடைபெறுகிறது. தினமும் இந்த பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளை தொடர்ந்து தினமும் மதியம் 1 மணி வரை அன்னதானம் நடைபெறுகிறது.

இதையும் படிங்க : பொள்ளாச்சிக்கு மினி கோடம்பாக்கம்னு பெயர் வாங்கி தந்தது இந்த பங்களா தானா..!

இதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறப்பு நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து 6.30 மணிக்கு தீபாரதனை, 8.30 அத்தாள பூஜை 9 ஹரவராசனத்துடன் நடை அடைக்கப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இந்த கோவிலில் விஷேச பூஜைகள் நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் அரவானா, அப்பம் பால் பாயாசம், அவில் நெய் வேத்தியம் வழங்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க 

இந்த கோவிலுக்கு செல்வதற்கான வழியை கூகுள் மேப் காட்டுகிறது. காணலாம் :

https://maps.app.goo.gl/YFAMTwZ2HHd6YHiNA

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News