Home /coimbatore /

Coimbatore | இளைஞர்களுக்கு முக்கிய செய்தி: அன்னூரில் 30-ம் தேதி இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி.!

Coimbatore | இளைஞர்களுக்கு முக்கிய செய்தி: அன்னூரில் 30-ம் தேதி இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி.!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அன்னூரில் நடைபெறவுள்ள இளைஞா் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    கோயம்புத்தூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அன்னூரில் இளைஞா் திறன் விழா ஜூலை 30ல் நடைபெறவுள்ளது. இதில் சேர எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

    இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் வட்டார அளவில் இளைஞா் திறன் விழா நடத்தப்பட்டு  வருகிறது. இதில் டி.டி.யூ.ஜி.கே.ஒய், ஆா்.ஆா்.எஸ், இ.டி.ஐ, டி.என்.எஸ்.டி.சி ஆகிய திட்டங்களின் கீழ் 18 முதல் 45 வயது வரையுள்ள ஆண், பெண் இருபாலருக்கும் இலவச
    திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் அன்னூா் கே.ஜி.மெட்ரி ட் க் மேல்நிலைப் பள்ளியில் இளைஞா் திறன் விழா ஜூலை 30-ம் தேதி காலை 9
    முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

    இதில் கிடங்கு மேற்பாா்வையாளர் சில்லறை வணிகம், ஆண்ட்ராட்ய்டு கைப்பேசி ஆப்ரேட்டர், கேட்டட்ரிங் மேலாளர், நிட்ஸ்ட்ஸ் மெஷின் ஆபரேட்டர், அழகுக் கலை பயிற்சி, தையல் பயிற்சி, மெழுகுவா்த்தி, ஊறுகாய், மசாலா தூள், பேஷன் நகைகள் தயாரிப்பு பயிற்சிகள், டெக்ஸ்டைல்ஸ், கைத்தறி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது.

    இதில் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவா்கள் வரை பங்கேற்று பயன்பெறலாம். பங்கேற்பாளர் கல்விச் சான்றிதழ், ஆதாா், சுயவிவரம், புகைப்படம் மற்றும் இதர சான்றுகளின் அசல் மற்றும் நகல்களை கொண்டுவர வேண்டும் என்று
    தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: ராஜீவ்காந்தி.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி