Home /coimbatore /

கோயம்புத்தூரில் ஆழியாற்றில் கரைபுரண்டோடும் தண்ணீர்- கரையோர மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் ஆழியாற்றில் கரைபுரண்டோடும் தண்ணீர்- கரையோர மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பொள்ளாச்சி பகுதியில் ஆழியாற்றின் கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pollachi, India
    கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அணையின் கொள்ளவான 120 அடியை எட்டியதால், உபரி நீர் வெளியே திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இரண்டாவது முறையாக ஆழியாருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு அப்பர் ஆழியாறு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த அணை மூலம் புதிய, பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படுகிறது. இதை தவிர கேரளாவுக்கு ஆண்டுதோறும் ஒப்பந்தப்படி தண்ணீர் வழங்கப்படுகிறது.

    கடந்த 2 மாதமாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த 4-ந் தேதி அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    பின்னர் நீர்வரத்தை பொறுத்து மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் ஆழியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைக்கு திடீரென்று வினாடிக்கு 1,500 கன அடி நீர் வந்தது. இதையடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக வினாடிக்கு 1,100 கன அடி நீர் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அணையின் நீர்மட்டம் தற்போது 117.90 அடியாக உள்ளது. இந்த நிலையில் மழையின் காரணமாக அணைக்கு திடீரென்று நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மேலும், தண்ணீர் வரத்து அதிகரித்தால், அணையின் மேலும் உள்ள மதகுதகள் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது. கடந்த முறை தண்ணீர் திறக்கப்பட்ட போதும், ஆழியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அப்போது கா.கா புதூர் பகுதியில் தரை பாலத்தை இரு சக்கர வாகனத்தை கடந்த போது, ஒருவர் வெள்ளத்தில் சிக்கி பலியானார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி