கோவை மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதியில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இக்கோவில் முருக கடவுளின் 7-ம் படை வீடு என்று அழைக்கப்படும்.
கோவை மாவட்டத்தின் மிக முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமாக இக்கோவில் உள்ளது. மேற்கு மலைத் தொடர்ச்சி வனப்பகுதி என்பதால் யானைகள் நடமாட்டம் அவ்வப்போது இருக்கும். இதனால் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பாக மாலை 7 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை.
இந்த நிலையில் கடந்த சித்ரா பவுர்ணமி அன்று மாலை 4 மணி அளவில் மருதமலை கோவிலுக்கு செல்லும் வாகன வழிப்பாதையின் அருகே வனப்பகுதியில் உள்ள பெரிய பாறையின் மீது யானை நின்றது.
மேலும் படிக்க... சென்னையில் போதை பொருள் விற்பனை... 2 பேர் கைது..!
கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து சென்ற போது யானை பொதுமக்கள் கண்ணில் பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்கு வந்தவர்கள் பலர் வாகனத்தை நிறுத்தி பார்த்தனர். அதனால் மருதமலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினர். யானையை வனத்திற்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்ட னர். ஆனால் நீண்ட நேரம் பாறையின் முகடில் ஒய்யாரமாக யானை நின்றது. சுமார் 1 மணிநேரத்திற்கு பின் யானை வனத்திற்குள் சென்று மறைந்தது. மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் யானை வந்ததால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.
செய்தியாளர்: சுரேஷ் ( கோவை )
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Elephant