முகப்பு /கோயம்புத்தூர் /

தமிழகத்திலேயே முதல்முறை..! கோவையில் சி.என்.ஜி சிலிண்டர்களை சோதனை செய்யும் மையம் துவக்கம்..!

தமிழகத்திலேயே முதல்முறை..! கோவையில் சி.என்.ஜி சிலிண்டர்களை சோதனை செய்யும் மையம் துவக்கம்..!

X
கோவையில்

கோவையில் சி.என்.ஜி சிலிண்டர்களை சோதனை செய்யும் மையம் துவக்கம்

CNG cylinder testing center launched in Kovai |தமிழகத்திலேயே முதன்முறையாக சி.என்.ஜி சிலிண்டர்களை சோதனை செய்யும் மையம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக சி.என்.ஜி சிலிண்டர்களை பரிசோதனை செய்யும் மையம் துவங்கப்பட்டுள்ளது.

சி.என்.ஜி., எனப்படுவது அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு ஆகும். பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக இந்த எரிவாயு தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசலை காட்டிலும் குறைந்த விலையில், அதிக மைலேஜ் தரும் இந்த சி.என்.ஜி எரிவாயு கார், ஆட்டோ மாற்றும் லாரிகளில் கூட தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இறக்குமதி செய்யப்படும் இந்த சி.என்.ஜி எரிவாயு கொண்ட வாகனங்கள் வரும் காலகட்டத்தில், எலெக்ட்ரிக் வாகனங்களை போல இந்திய சாலைகளை ஆக்கிரமிக்க உள்ளன. இந்த வாயு ஒரு சிலிண்டரில் அடைக்கப்பட்டிருக்கும். இந்த சிலிண்டரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழை பெற வேண்டும் என்பது விதி. அதே போல் 7வது முறை பயன்படுத்தப்பட்ட பிறகு இந்த சிலிண்டர்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

கோவையில் சி.என்.ஜி சிலிண்டர்களை சோதனை செய்யும் மையம் துவக்கம்

இதையும் படிங்க : கோவையில் கிரிக்கெட் போட்டி... புடவையில் கிரிக்கெட் விளையாடி அசத்திய நமிதா..!

சுருக்கமாக கூற வேண்டும் என்றால் நமது வாகனங்களுக்கு 'எஃப்.சி' செய்வது போலத்தான் இந்த சிலிண்டர்களை பரிசோதனை செய்யும் முறையும். பெங்களூரில் தான் சி.என்.ஜி சிலிண்டரகளை பரிசோதனை செய்யும் கூடங்கள் தமிழகத்தில் இதுவரை துவங்கப்படவில்லை. பரிசோதனை செய்யும் கூடம் பெங்களூரில் தான் உள்ளது.

இதனிடையே தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் சி.என்.ஜி சிலிண்டர்களை பரிசோதனை செய்யும் கூடம் துவங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வெள்ளானைப்பட்டியை அடுத்த செரயாம்பாளையம் பகுதியில் ஏர்வியோ என்ற நிறுவனம் இந்த பரிசோதனை கூடத்தை துவங்கியுள்ளது.

இதுகுறித்து ஏர்வியோ நிறுவனத்தின் பங்குதாரர் பார்த்தசாரதி கூறியதாவது, “கார், பேருந்து, லாரி, ஆட்டோ மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும். சி.என்.ஜி வாயு சிலிண்டர்களில் 250 பார் அளவு வரை அழுத்தத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அரசின் அனுமதியுடன் இந்த மையம் துவக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டினை வரும் 2070ம் ஆண்டுக்குள் முற்றிலும் நிறுத்த வேண்டும் என இந்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மக்கள் அடுத்த ஒரு சில ஆண்டுகளில் சி.என்.ஜி சிலிண்டர்களை பரிசோதனை செய்யத் துவங்கிவிடுவார்கள். இதனால் தற்போதே இந்த பரிசோதனை கூடத்தை துவங்கியுள்ளோம். கோவை மட்டுமல்லாது திருப்பூர், ஈரோடு மாற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் இதனால் பயன்பெறுவார்கள் என்று நம்புகிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.

    First published:

    Tags: Coimbatore, Local News