Home /coimbatore /

சினிமா ஷூட்டிங்குகளால் மீண்டும் சினிமா தலை நகரமாகும் கோவை..

சினிமா ஷூட்டிங்குகளால் மீண்டும் சினிமா தலை நகரமாகும் கோவை..

கோவை

கோவை

coimbatore Cinema Paradise : 1990களில் கோவை ஒரு சினிமா நகரமாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் முன்னணி கதாநாயகர்களாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்கள் இங்கு படம் பிடிக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டி அமைந்துள்ள கோவை, இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாகும்.  1990களில் கோவை ஒரு சினிமா நகரமாக இருந்தது. இங்கு பட்சிராஜா உள்ளிட்ட சில ஸ்டுடியோக்களும் இருந்தன. 

அன்றைய காலகட்டத்தில் முன்னணி கதாநாயகர்களாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்கள் இங்கு படம் பிடிக்கப்பட்டன.

காலப்போக்கில் தமிழகத்தின் சினிமா தலைநகராக சென்னை மாறியது. இருந்த போதிலும், எழில் கொஞ்சும் கோவையில் அவ்வப்போது படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
பொள்ளாச்சி, ஆனைமலை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பலரது திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஷூட்டிங் வீடு, சேத்துமடை


சூரிய வம்சம், வானத்தைப்போல, முரட்டுக்காளை, தேவர்மகன், பொன்னுமணி, ராஜகுமாரன், அமைதிப்படை, எஜமான், கிழக்கு வாசல், சின்னக்கவுண்டர், சகலகலா வல்லவன், உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் கோவையில் படமாக்கப்பட்டுள்ளன.
இதில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் அதிகமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இயற்கை சூழல், ஆதரவு கொடுக்கும் மக்கள், உபசரிப்பு, பட்ஜெட் படங்களுக்கு ஏதுவான இடங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் பொள்ளாச்சி மினி கோடம்பாக்கம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.
நாளடைவில் இந்த வழக்கம் குறைந்தது. முறையான உட்கட்டமைப்புகள் இல்லாததாலும், புதிய லொகேசன்கள் கிடைக்காத காரணத்தாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா படப்பிடிப்பை மறந்திருந்தது கோவை மாவட்டம்.

கோவை


இதனிடையே கோவையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கின. குளக்கரைகள் மேம்படுத்தப்பட்டதோடு, கோவையின் உட்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டன. இதன் காரணமாக கடந்த ஒரு சில ஆண்டுகளாக கோவையில் சினிமா படப்பிடிப்புகள்  அதிகரித்துள்ளது.

சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் பெரும்பாலானவை கோவையில் படமாக்கப்பட்டவை தான். அதில், டான், விக்ரம், வீட்ல விஷேசம், நெஞ்சுக்கு நீதி, ராம்சேட், டி ப்ளாக் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. இது தவிர மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி படங்கள் கோவையில் படமாக்கப்பட்டு வருகின்றன. மாதத்திற்கு 10 முதல் 20 திரைப்படங்கள் வரை கோவையில் எடுக்கப்பட்டு வருவதாக சினிமா துறையினர் தெரிவிக்கின்றனர்.

கோவை


கோவையில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், சென்னை, பெங்களூர் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை கோவையில் வைத்து எடுத்துவிட முடிகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சினிமா படப்பிடிப்புகள் அதிகரித்துள்ள காரணத்தால் கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். சினிமா தொழில் சார்ந்த தொழில்கள் மட்டுமல்லாது, ஆட்டோ, டாக்சி, உணவகங்களும் பயனடைந்து வருகின்றன.மேலும், சினிமா துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது.

கோவை மீண்டும் சினிமா நகரமாவது நிச்சயம்.. கோவை மக்களுக்கும் இது பயனளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
Published by:Arun
First published:

Tags: Cinema, Coimbatore, Local News, Tamil Cinema

அடுத்த செய்தி