முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் குழந்தைகளுக்கு பரவும் மர்ம காய்ச்சல் - சுகாதாரத்துறை எச்சரிக்கை

கோவையில் குழந்தைகளுக்கு பரவும் மர்ம காய்ச்சல் - சுகாதாரத்துறை எச்சரிக்கை

கோவை

கோவை

Children Fever In Coimbatore | குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டத்தில் தற்போது பன்றி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் ஆகியவை வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க ; கோவையில் குற்றங்கள் குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் புகார் அளிக்கலாம் - போலீஸ் கமிஷ்னர்

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பருவகால காய்ச்சல் பாதிப்புகள் கடந்த 2 வாரங்களாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோவையிலும் கடந்த 2 வாரங்களாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் பதிவாகி வருகிறது. குறிப்பாக குழந்தைகளிடையே காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் 5 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்றி காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே குழந்தைகளிடையே லேசான காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் காணப்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுகொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க; பொள்ளாச்சி-பழனி ரயில் வழித் தடத்தில் அதிவேகத்தில் பயணிக்கலாம்

இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா தெரிவித்துள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் தினசரி 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு பதிவு செய்யப்படுகிறது. இதில் சராசரியாக 2 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது.

பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏ.பி.சி என 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சி நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. சி நிலையில் உள்ளவர்களை மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது தனியார் ஆஸ்பத்திரிகளில் 5 பேர் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பன்றி காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல், வாந்தி போன்றவை முக்கிய அறிகுறிகளாகும்.

தீவிர பாதிப்பின் போது மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குறிப்பாக குழந்தைகளிடையே மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழை ஓய்வுக்கு பின்னர் இதுபோன்ற காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம் தான். இருந்தாலும் பெற்றோர்கள் கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Coimbatore, Local News