கோவை பீளமேடு ஹட்கோ காலணி பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா. 38 வயதான இவர் வழக்கமாக தனது கணவருடன் நடைபயிற்சிக்குச் செல்வது வழக்கம். கணவர் வெளியூர் சென்ற நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கவுசல்யா மட்டும் தனியாக நடைபயற்சிக்கு சென்றார்.
ஜி.வி.ரெசிடென்ஸி அருகே அவர் நடந்து வந்த போது, பின்னால் நம்பர் பிளேட் இல்லாத வாடகை காரில் வந்த மர்ம நபர்கள் கவுசல்யா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். அப்போது அவர் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் காரில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டி, நல்வாய்ப்பாக கார் சக்கரத்தில் சிக்காமல் உயிர் தப்பினார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
இதையும் படிக்க : கோவை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்..
இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் பகல் நேரத்தில் காரில் வந்து செயினை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CCTV Footage, Chain Snatching, Coimbatore, Tamil News