ஹோம் /கோயம்புத்தூர் /

மலைவாழ் பகுதி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல கார் வழங்கிய கோவை கல்லூரி மாணவர்கள்..!

மலைவாழ் பகுதி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல கார் வழங்கிய கோவை கல்லூரி மாணவர்கள்..!

X
மாணவர்களை

மாணவர்களை பிக் அப் செய்ய கார்

Coimabtore Anaikatti | கோவை மாவட்டம் ஆனைகட்டி மலைக்கிராமத்தில் மலைக்கிராம குழந்தைகள் படிப்பதற்காக தனியார் அறக்கட்டளையால் இயக்கப்படும் பள்ளி செயல்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore | Anaimalai

கோவையில் மலைவாழ் பகுதியில் வாழும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக தனியார் தொண்டு நிறுவனம் கார் ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி மலைக்கிராமத்தில் மலைக்கிராம குழந்தைகள் படிப்பதற்காக தனியார் அறக்கட்டளையால் இயக்கப்படும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு வந்து சேர போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால் ரோட்ரேக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இந்த பள்ளிக்கு கார் ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளனர்.

இந்த வாகனம் தினமும் காலை மற்றும் மாலையில் மாணவர்களை வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்து வந்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.

3.5 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ள இந்த கார் ஆனது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவது மட்டுமல்லாது, வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ரத்த தான முகாம் உள்ளிட்ட பல்வேறு முகாம்களுக்கும் செல்லும் என்றும், இதன் மூலமாக குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி உறுதி செய்யப்படும் என்றும் ரோட்ரேக்ட் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Car, Coimbatore, Local News, School students