ஹோம் /கோயம்புத்தூர் /

கிறிஸ்துமஸ்-க்காக 200 கிலோ பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்.. உலர் பழங்கள், மதுவகைகளுடன் ரெடி ஆகுது..!

கிறிஸ்துமஸ்-க்காக 200 கிலோ பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்.. உலர் பழங்கள், மதுவகைகளுடன் ரெடி ஆகுது..!

கோவை

கோவை - கிறிஸ்துமஸ் பண்டிகை

Coimbatore Christmas Cake Making | கோவை சின்னையம்பாளையம் பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் பிளம் கேக் தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை ஒட்டி கோவையில் உலர் பழ வகைகள், மதுபானங்களின் கலவையுடன் கேக் மிக்ஸிங் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான கிறிஸ்துமஸ் வரும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் கேக் முக்கியப் பங்கு வகிக்கிறது. பண்டிகைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இந்த கேக் தயாரிப்பு தொடங்கிவிடும்.

அதன்படி, உலர் பலங்கள், மதுபான வகைகள் ஒன்றாக கலக்கப்பட்டு பதப்படுத்தப்படும். பண்டிகைக்கு ஓரிரு தினங்களுக்கு முன் கிறிஸ்துமஸ் பிளம் கேக் முழுமையாக தயாரிக்கப்பட்டு பண்டிகை தினத்தன்று பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

இதனிடையே கோவை சின்னையம்பாளையம் பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் பிளம் கேக் தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது

இதற்காக விடுதி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேஜையில் முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம் , பாதாம், வால்நட், உள்ளிட்ட உலர் பழ வகைகள் ஆகியவை தனித்தனியே வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு திரண்டிருந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த உலர் பழங்களின் மீது 10க்கும் மேற்பட்ட உயர் ரக மதுபானங்களை ஊற்றி கேக் மிக்ஸிங்கிற்கான கலவையை தயாரித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கலவை அடுத்த இரண்டு மாதங்களுக்கு பதப்படுத்தப்பட்டு சுமார் 200 கிலோ எடையிலான கேக் தயாரிக்கப்படும் எனவும், மதுபானங்களில் உலர் பழங்கள் நன்றாக ஊறும் பட்சத்தில் சுவையான பிளம் கேக் தயாராகும் எனவும் அது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது எனவும் கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்

Published by:Arun
First published:

Tags: Christmas, Coimbatore, Local News