Home /coimbatore /

மலிவு விலையில் எலெக்ட்ரிகல் பொருட்கள் வாங்கனுமா? கோவை கே.கே.லேன்-க்கு வாங்க..

மலிவு விலையில் எலெக்ட்ரிகல் பொருட்கள் வாங்கனுமா? கோவை கே.கே.லேன்-க்கு வாங்க..

கோவை

கோவை கே.கே.லேன்

Coimbatore KK Lane : கோவையில் எலெக்ட்ரிகல் பொருட்கள் மற்றும் வண்ணமயமான டிசைனர் மின் விளக்குகள் கே.கே லேன் என்று அழைக்கப்படும் கடலைக்கார சந்தில் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவை அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது கே.கே.லேன் என்று அழைக்கப்படும் கடலைக்கார சந்து. குறுகலான இந்த பகுதி முழுவதுமே எலெக்ட்ரிகல் மற்றும் வண்ண வண்ண மின் விளக்குகள் மொத்த விற்பனை செய்யும் கடைகளாக தான் உள்ளன.

மொத்த விற்பனை கடைகள் இங்கு இருந்தாலும் சில்லறை வணிகமும் மேற்கொள்ளப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற விலை மற்றும் தரத்தில் எல்க்ட்ரிகல், பிளம்பிங்  மற்றும் மின் விளக்குகள் இங்கு வாங்கிக் கொள்ள முடியும்.

கோவை கே.கே.லேன்


சென்னைக்கு அடுத்த பெரிய எலெக்ட்ரிகல் மார்க்கெட்டாக இருக்கும் இந்த பகுதியில் சுமார் 800 கடைகள் உள்ளன. இதனால் நாம் வெவ்வேறு கடைகளுக்கு சென்று விலைப்பட்டியலை வாங்கி ஒப்பீடு செய்து குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம்.

கோவை கே.கே.லேன்


ரீடெய்ல் கடைகளில் வாங்குவதைக் கட்டிலும் மின் விளக்குகள், ஃபேன், பிளம்பிங்  செய்ய தேவையான பொருட்கள், சுவிட்ச் போர்டுகள், மின் வயர்கள் உள்ளிட்டவற்றை குறைந்த விலையில் வாங்கலாம். உதாரணமாக மின் விசிறி ஒன்றை ரூ.500 முதல் ரூ.600க்குள் வாங்கலாம்.

கோவை கே.கே.லேன்


இந்த எலெக்ட்ரிகல் மார்க்கெட்டிற்கு கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மக்களும் கேரளாவில் இருந்தும் பொதுமக்களும், வணிகர்களும் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

Kadalaikara Street
கே.கே. லேன் செல்லும் வழியை காட்டுகிறது 'கூகுள் மேப்' :
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி