முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவையில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு.. விசாரணையில் போலீசார்...!

கோவையில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு.. விசாரணையில் போலீசார்...!

பெண் இறந்து கிடந்த வீடு

பெண் இறந்து கிடந்த வீடு

Coimbatore | கோவையில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரணை செய்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை காந்திபுரம் பகுதியில்  அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில், சிறிய அறை உள்ளது. இதில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட பொது மக்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க...  காரை ஏற்றி கொல்லும் கொடூரம் - பா.ஜ.க நிர்வாகி கொலை ஏன்?

top videos

    மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளும்  ஆய்வுக்கு உட்படுத்தபட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்த பெண் யார்?  எதற்காக இங்கு வந்தார்?  கொலை செய்யப்பட்டாரா? அல்லது அது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    First published:

    Tags: Coimbatore, Crime News, Murder