முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையின் அடையாள சின்னங்கள்.. சாரட்டு வண்டியில் கெத்தாக வந்த சிறுவன்..

கோவையின் அடையாள சின்னங்கள்.. சாரட்டு வண்டியில் கெத்தாக வந்த சிறுவன்..

X
கோவையின்

கோவையின் அடையாள சின்னங்கள்

Kovai News : காதணி விழாவிற்காக கோவையின் அடையாள சின்னங்களை சீர்வரிசையாக எடுத்துக் கொண்டு, சாரட்டு வண்டியில் சிறுவன் அழைத்துவரப்பட்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூரின் அடையாள சின்னங்களை சீர்வரிசையாக எடுத்துக் கொண்டு, சாரட்டு வண்டியில் சிறுவன் அழைத்துவரப்பட்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவை சங்கனூரை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது மகன் புகழேந்தி. இவரது காதணி விழா ஞாயிறன்று நடைபெற்றது. சிறுவனின் காதணி விழாவை வித்தியாசமான முறையில் நடத்த பெற்றோர்கள் திட்டமிட்டனர். அதன்படி, செண்டை மேளம் முழங்க வீட்டில் இருந்து விழா நடைபெறும் இடத்திற்கு சிறுவன் சாரட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டார்.

சாரட் வண்டியில் வந்த சிறுவன்

காதணி விழாவிற்கு கோவையின் முக்கிய பகுதிகளான ரயில்நிலையம், மணிக்கூண்டு, கோனியம்மன் கோவில், மருதமலை கோவில் உள்ளிட்ட 8 பகுதிகளின் மாதிரிகளை சீர்வரிசையாக கையில் ஏந்திய அவரது உறவினர்கள், சிறுவனை ஒய்யாரமாக அழைத்து வந்தனர்.

கோவையை பெருமைப்படுத்தும் விதமாக இந்த சின்னங்களை சீர் வரிசையுடன் எடுத்து வந்ததாகவும், மேலும் நமது மாவட்ட அடையாள சின்னங்கள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்த செண்டை மேளம் முழங்க பேரணியாக நடந்து வந்ததாகவும் சிறுவனின் பெற்றோர் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News