ஹோம் /கோயம்புத்தூர் /

கண்ணை கட்டிக்கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றிய கோவை சுட்டீஸ்கள்..

கண்ணை கட்டிக்கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றிய கோவை சுட்டீஸ்கள்..

X
கண்ணை

கண்ணை கட்டி சிலம்பம் சுற்றிய சுட்டீஸ்கள்

Coimbatore District News : கண்ணை கட்டிக்கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றிய சுட்டிகள்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

சிலம்பம் விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் பள்ளி மாணவர்கள் இணைந்து கண்ணை கட்டிக்கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை இன்றைய காலகட்டத்தில் பலரும் கற்க துவங்கியுள்ளனர். இதனிடையே சிலம்பம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றியுள்ளனர்.

சுங்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் அலர்மேல்மங்கை ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இதையும் படிங்க : கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம்.. பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு

இந்நிகழ்ச்சியில் 4 வயது முதல் 17 வயது உள்ள மாணவர்கள் கலந்து கொண்டு கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி தாய் தமிழ்புக் ஆஃப் ரெகார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.

தமிழரின் பாரம்பரிய கலையை வளர்ப்பதற்கும் குழந்தைகளிடையே ஆர்வத்தை ஊக்குவிப்பதற்கும் இத்தகைய சாதனைகள் உதவும் என்றும் இது போன்ற சாதனைகள் தொடர்ந்து நடக்க வேண்டும் என்றும், பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்திற்கு காவல் துறை தொடர்ந்து ஆதரவை வழங்கி வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News