முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் - அண்ணாமலை

2024 மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

BJP Annamalai :  2024 தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படவே பாஜகவிற்கு வந்தேன். தொண்டனாக வேலை செய்வேன். 2024 தேர்தலில் டெல்லி செல்ல எனக்கு விருப்பமில்லை என்று அண்ணாமலை கூறினார்.

  • Last Updated :
  • Coimbatore, India

வரும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், காவல்துறையினருக்கு நேரத்திற்கு பதவி உயர்வு கிடைப்பதில்லை. கிரேடு 2 பதவியில் இருக்கும் காவல்துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்காதது கண்டிக்கத்தக்கது. காவல்துறையின் நலத்தை பார்க்க வேண்டும்.காவல்துறையினரின் பதவி உயர்வு குறித்து டிஜிபி முதல்வரிடம் பேச வேண்டும் என்றார்.

திமுக அரசு வந்த பின்னர், கமிஷன் அரசு கமிஷனுக்காக வேலை செய்கின்றனர். அமைச்சர்கள் வருமானத்தை ஈட்ட முடியுமா என்பதைத்தான் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் 2021-22, 22-23 ஆம் ஆண்டில் 22 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. மது குடிப்பவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கலால் எப்படி வருமானத்தை ஈட்டி கொடுக்க முடியும் என்பது வெள்ளை அறிக்கையில் உள்ளது.

இதையும் படிங்க: பாஜக துணைத்தலைவர் பால் கனகராஜ் மீது இந்து முன்னணி பாய்ச்சல்..

 2024 தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படவே பாஜகவிற்கு வந்தேன். தொண்டனாக வேலை செய்வேன். 2024 தேர்தலில் டெல்லி செல்ல எனக்கு விருப்பமில்லை. தேர்தலில் நிற்பவர்களின் வெற்றிக்காக பாடுபடுவேன். தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விருப்பமில்லை. இந்த மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன் என்று அண்ணாமலை கூறினார்.

top videos
    First published:

    Tags: Annamalai, BJP, Coimbatore