ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் நடைபெற்ற பாரதியார் குறித்த சிந்தனை அமர்வு

கோவையில் நடைபெற்ற பாரதியார் குறித்த சிந்தனை அமர்வு

X
பாரதியார்

பாரதியார் சிந்தனை அமர்வு

பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மக்கள் சிந்தனை மேடை சார்பில் பாரதியார் குறித்த சிந்தனை அமர்வு நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

மகாகவி பாரதியாரின் 141வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை மக்கள் சிந்தனை மேடை சார்பில் காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் அரங்கத்தில் சிந்தனை அமர்வு நடைபெற்றது.

இதில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு பாரதியாரின் புத்தகங்கள், எண்ணங்கள் மற்றும் அவரது பெருமைகள் குறித்து உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மக்கள் சிந்தனை மேடை அமைப்பைச் சேர்ந்தவர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பாரதியார் சிந்தனையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், ‘பாரதியார் அரசியல் விடுதலை குறித்து பாடுவதோடு நிறுத்தவில்லை. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பொருளாதார விடுதலை குறித்தும் பாடுகிறார். சமூக விடுதலை குறித்தும் பாடுகிறார். பெண் விடுதலை குறித்தும் பாடுகிறார்.

காலத்தால் புறக்கணிக்க முடியாத கவிஞர் பாரதியார். இந்தியா பத்திரிகையின் அறிவிக்கப்படாத ஆசிரியராக இருந்தவர் பாரதியார். இவரை கைது செய்ய திட்டமிட்ட பிரிட்டிஷ் காவல்துறையினர் அதற்கான காரணத்தைத் தேடினர். அப்போது அயர்லாந்தில் நடைபெற்ற விடுதலை போராட்டம் குறித்து ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டு வந்தது.

அதனை இந்தியாவில் ஆங்கிலேயர்கள் தடை செய்கிறார்கள். தடை செய்யப்பட்ட அந்த பத்திரிகைக்கு இந்தியாவில் மொத்தம் 20 சந்தாதாரர்கள். இதில் 19 பேர் ஆங்கிலேயர்கள். 20வது சந்தாதாரர் சுப்ரமணியபாரதி. இதனைக் காரணமாக வைத்து பாரதியை கைது செய்தார்கள். தடை செய்யப்பட்ட பத்திரிகையை படித்து அதை தமிழ் மக்களுக்கு சொல்லிக்கொடுத்த பெருமை பாரதியாருக்கு உண்டு’ என்றுதெரிவித்தார்.

செய்தியாளர்: சௌந்தர் மோகன், கோயம்புத்தூர்.

First published:

Tags: Coimbatore, Local News