ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் அழகிப்போட்டி.. மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றது யார் தெரியுமா?

கோவையில் அழகிப்போட்டி.. மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றது யார் தெரியுமா?

X
கோவையில்

கோவையில் அழகிப்போட்டி

Coimbatore District News : கோவையில் அழகிப்போட்டி.. ஒய்யார நடைபோட்ட பெண்கள்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் நடைபெற்ற அழக்கிப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் ஒய்யார நடைபோட்டு அசத்தினர்.

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் மிஸ் தமிழ்நாடு அழகிபோட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கோவை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து தலா ஒரு போட்டியாளர் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களும் பார்வையாளர்கள் முன்னிலையில் பாரம்பரிய மற்றும் மேற்கத்திய உடைகள் அணிந்து பூனை நடைபோட்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் பிக் பாஸ் புகழ் சனம் செட்டி உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்றனர். அவர்கள், போட்டியாளர்களிடையே பெண்ணியம் என்பது என்ன? அழகு என்பது எதில் உள்ளது? தமிழ் மொழியின் சிறப்புகள் என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இதையும் படிங்க : கோவைக்கு விமானத்தில் வந்த ஆதரவற்ற மாணவர்கள்... வரவேற்ற ஆட்சியர்...

இந்த போட்டியில் 21 வயதான அக்ஷதா தாஸ் என்ற போட்டியாளர் மிஸ் தமிழ்நாடு பட்டத்தைப் பிடித்தார். அவருக்கு மிஸ் தமிழ்நாடு போட்டிக்கான கிரீடம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கேல் கூறுகையில், "கடந்த 13 ஆண்டுகளாக இந்த போட்டியை நடத்தி வருகிறோம். இந்தாண்டு கலந்து கொண்ட 16 போட்டியாளர்களும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நடை, உடை, ஒப்பனை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News