ஹோம் /கோயம்புத்தூர் /

வால்பாறை, குரங்கு அருவிக்கு சுற்றுலா செல்ல திட்டமா? - இதை மிஸ் பண்ணாம படிங்க!

வால்பாறை, குரங்கு அருவிக்கு சுற்றுலா செல்ல திட்டமா? - இதை மிஸ் பண்ணாம படிங்க!

குரங்கு அருவி

குரங்கு அருவி

Monkey Falls| கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள குரங்கு அருவிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருப்பவர்கள், வனத்துறையினர் வெளியிட்டுள்ள இந்த தகவலை மனதில் கொள்ளுங்கள். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறில் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது குரங்கு அருவி. பொள்ளாச்சி - வால்பாறை சாலையில், ஆழியாறு வனப்பகுதியில் அமைந்திருக்கிறது இந்த அருவி. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ளது. பொள்ளாச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், கோவையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அருவி, இயற்கை அன்னையில் அற்புத கொடை.

இது கவியருவி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அருவிக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது, பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து நீராடி மகிழ்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழையால் இந்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

அதன்பின்னர், பருவமழை குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாகக் குறைய தொடங்கியது. எனவே, சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் விடுமுறை நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அருவியில் உற்சாகமாகக் குளித்துச் சென்றனர்.

குரங்கு அருவி

அதனைத் தொடர்ந்து, வார விடுமுறை நாட்களில் குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து. அதன்படி நேற்று காலை 7 மணியளவில், இந்த குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சில்லென்று ஆர்ப்பரித்து கொட்டிய அருவியில் பலரும் ஆனந்த குளியல் போட்டனர். தொடர்ந்து கூட்டம் அதிகமானதால், சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்து குளித்தனர்.

Must Read : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

இந்நிலையில், ஆழியாறு மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அருவியில் வால்பாறை சக்தி எஸ்டேட் மற்றும் வனப்பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக அவ்வப்போது வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதியம் 1.30 மணியளவில் சுற்றுலா பயணிகள் குரங்கு அருவியில் குளிக்க வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்தனர். இதனால் சுற்றுலா வந்த ஏராளமான பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதனைத் தொடர்ந்து இன்றும் (திங்கட்கிழமை) மழை அதிகமாக பெய்தால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கும் நிலை ஏற்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், வெள்ளப் பெருக்கு குறைந்த பிறகுதான் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும். எனவே, மழை நிற்கும் வரையில், இந்த குரங்கருவிக்கு செல்லும் பயண திட்டத்தை சுற்றுலா பயணிகள் ஒத்தி வைப்பது நல்லது.

Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Local News, Tourist spots