முகப்பு /கோயம்புத்தூர் /

வித்தியாசமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்..! கோவையில் செவிலியர் தினத்தையொட்டி ஏற்பாடு..!

வித்தியாசமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்..! கோவையில் செவிலியர் தினத்தையொட்டி ஏற்பாடு..!

X
கோவையில்

கோவையில் ஊமை நாடகம் மூலம் விழிப்புணர்வு

International Nurses Day : செவிலியர் தினத்தையொட்டி கோயம்புத்தூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு ஊமை நாடகம் மூலம் செவிலியர் கல்லூரி மாணவிகள் பொதுமக்கள் மத்தியில் நோய் வராமல் மக்கள் தங்களை பாதுகாப்பது குறித்த ஊமை நாடகம் நடத்தினர்.

மருத்துவமனையில் மருத்துவர்களை விட செவிலியர்கள் பங்கு என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இதேபோல் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பாதுகாவலராகவும் செவிலியர்கள் திகழ்கின்றனர்.

இத்தகைய செவிலியர்கள் தினம் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள், உக்கடம் பெரியகுளத்தில் செவிலியர் தினத்தை கொண்டாடினர்.

கோவையில் ஊமை நாடகம் மூலம் விழிப்புணர்வு

இதையும் படிங்க : 10 ரூபாய்க்கு கிடைக்கும் ஃப்ரெஷ் ஜூஸ்..! ரங்கநாதன் தெருவை தேடிச்செல்லும் விழுப்புரம் மக்கள்..!

இதில் மக்கள் நோய் வராமல் தங்களை பாதுகாப்பது குறித்த பதாகைகள் கொண்டு ஊமை நாடகம் மூலமாகவும், நடனம் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Coimbatore, Local News