Home /coimbatore /

Coimbatore : கையிலே ஆகாசம்... விமானவியல் துறையில் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் கண்காட்சி..

Coimbatore : கையிலே ஆகாசம்... விமானவியல் துறையில் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் கண்காட்சி..

கோவை

கோவை

Coimbatore District : கோவையில் நடைபெற்ற விமான கண்காட்சியில் மாணவர்கள் முதல் முறையாக விமானி இருக்கையில் அமர்ந்ததோடு, விமானம் இயங்கும் முறை குறித்து அறிந்து கொண்டனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் நேரு விமானவியல் கல்லூரி சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக விமானங்களின் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இக்கண்காட்சி நடத்தப்படாமலிருந்த நிலையில் இவ்வாண்டு 14வது ஆண்டாக இக்கண்காட்சி நடத்தப்பட்டது.

இதில் விமானவியல் துறையில் நேரடியாக தொழில்நுட்ப விஷயங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் விதமாகவும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விமானத்தில் செயல்பாடுகள், விமானம் இயங்கும் முறை, என்ஜின் செயல்பாடுகள், தொழில்நுட்ப இயக்கம் தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

விமானத்தை பார்வையிடும் மாணவர்கள்..


விமானவியல் துறையில் ஆண்டு தோறும் உருவாகும் 25 சதவீதம் முன்னேற்றத்தை, புதிய திட்டங்களை மாணவ மாணவியர்களும் பொது மக்களும் தெரிந்துகொள்ளும் விதமாக இது அமைந்திருக்கின்றன.

காக்பிட் அறையில் மாணவர்கள்..


வானூர்தி என்ஜின் செயல்பாடுகள், தொழில் நுட்பம் , தற்போதைய நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் வானூர்தியின் இயங்குகின்ற விளக்கம் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன.

விமானத்தை பார்வையிடும் மாணவியர்..


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இக்கண்காட்சியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கவரும் விதமாக பறக்கும் நிலையில் இயங்கக்கூடிய 5 விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் பார்வையாளர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்காட்சியில் நிறுத்தப்பட்டுள்ள விமானம்..


விமானவியல் துறையில் தொழில் நுட்ப வல்லுநர்களாக, விமானியாக பணியாற்ற இலக்காகக் கொண்ட மாணவர்களுக்கு விமானவியல் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Flight, Local News, Plane

அடுத்த செய்தி