முகப்பு /கோயம்புத்தூர் /

பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

பொள்ளாச்சி நகராட்சி

பொள்ளாச்சி நகராட்சி

Coimbatore News | தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்தார்.

  • Last Updated :
  • Pollachi, India

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தற்போது பொள்ளாச்சி வந்திருந்தார்.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், மற்றும் பாதாள சாக்கடை திட்ட சுத்தகரிப்பு நிலையம் உள்ளிட்ட இடங்களுக்குச் நேரில் சென்று நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். அப்போது பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் பொள்ளாச்சி நகராட்சியை முன்மாதிரியான நகராட்சியாக கொண்டு வரசெயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை தயார் செய்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார்..

ஆய்வின் போது பொள்ளாச்சிநகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

top videos
    First published:

    Tags: Coimbatore, Local News